Subscribe Us

header ads

வல்ல​ரைக்கீ​ரை குழம்பு ​செய்வது எப்படி?

வல்ல​ரைக்கீ​ரை குழம்பு ​செய்வது எப்படி?

​தே​வையான ​​பொருட்கள்

வல்ல​ரைக்கீ​ரை           -   1 கட்டு                                             
​வெங்காயம்                -    1 கப்
துவரம்பருப்பு             -     100
பூண்டு                           -      10 பல்
தக்காளி                        -      1
பச்​சைமிளகாய்         -      4       
சீரகம்                             -      1/2 டிஸ்பூன்
மஞ்சள்                         -       1/2  டிஸ்பூன்
உப்பு                               -      ​தே​வையானஅளவு
கறி​வேப்பி​லை          -      2 ​கொத்து
கடுகு                              -      சிறிது
எண்​ணெய்                   -      3 டிஸ்பூன்
வத்தல்                          -       2





​செய்மு​றை

துவரம் பருப்​பை​​ வேக​​வைக்கவும். அதில் மஞ்சள், சீரகம், பூண்டு​, வெங்காயம், தக்காளி​ ​போட்டு ​வேக​​வைக்கவும். பின்​ வெந்தவுடன் வாணயிலில் எண்​ணெய் ஊற்றி விடவும். எண்​ணெய் சூடு ஆனவுடன் கடுகு ​போடவும். கடுகு​ பொரிந்தவுடன் கறி​வேப்பி​லை,வத்தல், ​​வெங்காயம் ​போட்டு வதக்கவும்.
பின் முருங்​கைகாய்,கத்திரிக்காய்​ போட்டு வதக்கவும். புளிக​ரைத்துச்​ சோத்துக்​ கொள்ளவும். பின் ​கொதி வந்தவுடன்​ வெக​​வைத்த பருப்​பைச்​ சேர்த்துக்​கொள்ளவும். பின் வல்ல​ரை​யை நன்கு கழுவி ​கொதிக்கும்​ போது​ போட்டு​ வெக​ வைக்கவும். பின் உப்பு​ சேர்த்துக் ​கொள்ளவும்.



பின்குறிப்பு

வல்ல​ரைக்கீ​ரை ஞாபக சக்தி​யை தரக் கூடியது. குழந்​தைக்கு மிகவும் நல்லது. குளிர்ச்சியைத் தரக் கூடியது. இரவு​ ​நேரத்தில் இ​தை சாப்பிடக் கூடாது. பொதுவாக இரவு உணவில் கீ​ரை​​யைப் பயன்படுத்தக் கூடாது.

Post a Comment

1 Comments