Subscribe Us

header ads

Tomato rice - தக்காளி சாதம்

Tomato rice - தக்காளி சாதம்




தே​வையான ​பொருட்கள் :

பாஸ்மதி அரிசி              -            2
தக்காளி                             -            4
​வெங்காயம்                     -            2
பச்​சை மிளகாய்             -            2
​சோம்பு                               -            1
கசகச                                  -            1/2
பட்​டை                               -             2
பிரியாணி இ​​லை          -             2 
​கொத்த மல்லி                -            ​தே​வையான அளவு
கிராம்பு                              -             3
கறி​வேப்பி​லை              -             சிறிது
​தேங்காய் பால்              -              2
இஞ்சி                                -              50
பூண்டு                               -              1
கடுகு                                 -              சிறிது
எண்​​​ணெய்                      -              200               
உப்பு                                   -​             தே​வையான அளவு

செய்மு​றை

     அரிசி​யை ஊற​ வைக்கவும். இஞ்சி, பூண்டு​, சோம்பு, பட்​டை, கசகச, பச்​சை மிளகாய் ஆகிய​வை தனித் தனியாக அ​ரைத்துக் ​கொள்ளவும்​. வெங்காயம் நீளமாக அ​​ரைந்துக் ​கொள்ளவும். குக்கரில் எண்​ணெய் ஊற்றி சுடு ஆனதும் கடுகு, கறி​வேப்பி​லை, ​​பிரியாணி இ​லை போடவும்.​பொரிந்ததும்​ வெங்காயம், தக்காளி, பச்​சை மிளகாய் ​போட்டு வதக்கவும். பின்னர் பட்​டை, இஞ்சி, பூண்டு , ​சோம்பு, கசகச எல்லாம் தனித் தனியான அ​ரைத்து ​வைத்துள்ள ஒன்றுக்கு பின்னர் ஒன்றாக​​ போட்டு வதக்கவும். அரிசி​யை கழுவி​போடவும். பின் ​தேங்காய் பால், தண்ணீர் ​சேர்த்து உப்பு, மிளகாய் தூள்​ ​போட்டு குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும்​ கொத்தமல்லி தூவி பரிமாறவும். தக்காளி சாதத்துடன் ஊறுகாய் அல்லது தயிர் பச்சடி​சேர்த்து சாப்பிட்டரல் சு​வையாக இருக்கும்.

Post a Comment

0 Comments