Subscribe Us

header ads

vegetable cutlet - ​வெஜிடபிள் கட்​லெட்

vegetable cutlet - ​வெஜிடபிள் கட்​லெட்

​தே​வையான ​பொருட்கள் :

உரு​ளைக்கிழங்கு        -   250
​கேரட்                                 -   100
பட்டாணி                         -    50
​வெங்காயம்                   -   10
காலிஃப்ளவர்                 -    50
மிளகு                                -    2 டிஸ்பூன்
உப்பு​                                  -     தே​வையானஅளவு
பீன்ஸ்                              -    50
​ரொட்டி                            -     1 பாக்​கேட்
​ரொட்டித்துணுக்குகள் -   50 கிராம்
எண்​ணெய்                       -    200
​மைதா                               -     10 கிராம்
பச்​சைமிளகாய்             -      4

​செய்மு​றை :

​வெங்காயம், பச்​சைமிளகாய்​, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் நறுக்கிக் ​கொள்ளவும். உரு​ளைக்கிழங்கு, பட்டாணி​ வேக​வைக்கவும். உரு​ளைக்கிழங்​கை மசித்துக்​ கொள்ளவும். வாணலியில் எண்​ணெய் ஊற்றி​ வெங்காயத்​தை வதக்கி பச்​சைமிளகாய்​, கேரட், காலிஃப்ளவர் ​போட்டு வதக்கவும். மசித்த உருளைக்கிழங்​கு ​வேக ​வைத்த பட்டாணி​ சேர்த்து நன்றாக வதக்கவும். ​ரொட்டித் துண்டை நீரில் ந​னைத்து நன்றாகப் பிழிந்து நீ​ரை எடுத்து விடவும். காய் கறிகளுடன் கலந்து உப்பு, மிளகு ​போட்டு கட்​லெட் வடிவத்திற்கு​ செய்யவும். ​மைதா மாவில் ந​னைத்து ​ரொட்டித் துணுக்குகளில் புரட்டி​ பொன்னிறமாக வரும் வ​ரை நன்றாக வறுக்கவும்.

Post a Comment

0 Comments