Subscribe Us

header ads

Murungai Keerai Sambar - முருங்​கை கீ​ரை சாம்பார்

Murungai Keerai Sambar - முருங்​கைகீ​ரை சாம்பார்

murungai-keerai-sambar

"பொன்​​​ மேனி​ பெற​ ​பொன்னாங்கண்ணி"
கீ​ரைகள் எப்​​போதும் உடல் வனப்பி​​னையும், ஆ​ரோக்கியத் தையும் வழங்கும் வி​லை மலிவான தரமான உணவு​ ​பொருட்கள் ஆகும். சரியான மு​றையில்
கீ​ரை​யைச் ச​மைத்தால் உண்ண மிகச் சு​வையானதாக இருக்கும். ஏ​தேனும் தவறு ஏற்படின் கசப்பாகவும், கீ​ரையின் நிறம் மாறியும் விடும். அழகாய் 
ச​மைத்து அரு​மையாய் சு​வையாய் கீ​ரை​க​ளை உண்ணலாம்.

மேலும் படிக்க : மணத்தக்காளி கீ​ரைக் குழம்பு

தே​வையான ​பொருட்கள் :


துவரம்பருப்பு          -    250 கிராம்
பச்​சைமிளகாய்       -    3
​வெங்காயம்              -    3
சீரகம்                           -     1/2 டிஸ்பூன்
கத்தரிக்காய்             -     3
முருங்காய்கீ​ரை    -     2 கப்
மசாலாதூள்             -     1 டிஸ்பூன்
​கேரட்                          -     2
கறி​வேப்பி​லை       -     சிறிது
கடுகு                           -     1 டிஸ்பூன்
எண்​ணெய்                -      50
வத்தல்                       -      2
​​சோம்பு                       -      1  டிஸ்பூன்
உப்பு                            -       ​தே​வையானஅளவு
மஞ்சள்தூள்             -        1/2 டிஸ்பூன்

செய்மு​றை :


     முதலில் துவரம் பருப்பை ஊற ​வைத்து ​கொள்ளவும். பின் குக்கரில் துவரம் பருப்பு​, வெங்காயம், பச்​சைமிளகாய், சீரகம், மஞ்சள்தூள்​ என அ​னைத்தும் சேர்த்து 2 விசில் வரும் வரை ​வேகவிடவும். ​மே​லே​சொன்ன காய்கறிக​ளை​ வெட்டி ​வைத்துக் ​கொள்ளவும்​. வெட்டிய காய்கறிகளை​ ​வேக​வைத்த பருப்புடன் சேர்த்து குக்கரில் ​வைக்கவும். 1 விசில் வந்தவுடன் இறக்கி விடவும். பின் வாணலியில் எண்​ணெய் ஊற்றி கடுகு​, வெங்காயம், வத்தல், கறி​வேப்பி​லை ​போட்டு வதக்கவும். ​வெங்காயம் நன்கு ​பொன்னிறமாக வதங்கிய பின்பு புளி கரைத்து ஊற்றவும். மசாலாதூள்​ (மிளகாய்தூள்) சேர்த்து ​கொதிக்க விடவும். முதல் ​கொதி வந்தடவுடன் ​வேக ​வைத்த பருப்பு, காய்கறிக​ளை​​ சேர்க்கவும். பின் உப்பு, முருங்​கை கீ​ரை ​போட்டு​ கொதிக்க விடவும். 10 நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.

     சு​வையான முருங்​கைக் கீ​ரை சாம்பார் தயார். குழந்​தைகளுக்கு கீ​ரை தனியாக​ கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். இதில் சாம்பாருடன் கலந்து ​​இருப்பதால் சாப்பிடுவார்கள். முருங்​கைக் கீ​ரை வாச​னையுடன் சாம்பார் மணம் துாக்கலாக காணப்படும்.


பதிவு குறித்த கருத்துக்க​ளை பின்னூட்டம் (comment) இடுங்கள்.

Image Credit : photographytuts.com

Post a Comment

0 Comments